Show all

கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக ஊக்கமுடன் நோற்றிருப்பது தவம்

உங்களுக்கு இதுவரை கிடைத்தது அனைத்தும், நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் கடவுளிடம் கேட்டதும் நோற்றதும் மட்டுமே என்பதை தமிழ்முன்னோர் முன்னெடுத்த வாழ்க்கை நெறி (மதம்) ஐந்திரம் நிறுவியுள்ளது. அந்த அடிப்படையில், 'கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக ஊக்கமுடன் நோற்றிருப்பது தவம்' என்று நீங்கள் கொள்ள வேண்டிய உறுதிமொழியை விளக்கியுள்ளது இந்தக் கட்டுரை. 

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: என் வாழ்க்கைநெறி (மதம்) ஐந்திரம். என் ஐந்திரம் நிறுவிய கடவுள் ஒன்று. இறை நான்கு. தெய்வங்கள் பல.

வெளி, விண்வெளி, விசும்பு என்று கடவுள் மூன்று நிலைகளை உடையது. நிலம், நீர், தீ, காற்று என்பன நான்கும் இறை. கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள்.

கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு.

என்னால் உருவான என்தமிழ், என் முதலாவது கடவுள் கூறு ஆகும்.

எனது மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களால் பட்டறியப்படுகிற அறிவின் சேமிப்பகமாகவும், அந்த புலன்களின் அறிவால் பதிவு பெற்ற வகைக்கு அவற்றை இயக்கும் என் ஆறாவது புலன் ஆன மனம் இரண்டாவது கடவுள் கூறு.

எனது, என்தலைவியினது மரபில், தான்தோன்றி கூட்டியக்கமாக உருவான எம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மூன்றாவது கடவுள் கூறு.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தெடரின், கேளிரால் உருவாக்கப்பட்ட பல்வேறு கருவிகள், நாம் கொண்டாடத்தக்க நான்காவது கடவுள் கூறு.

என்செயல், என்எண்ணம், என்தமிழால் நான் முன்னெடுத்த என் அனைத்து இயக்கமும்- ஒவ்வொரு விநாழிகையும், கடவுளின் முதல்நிலையான இயக்கமற்ற வெளியில் பதிவாக, என்னால்வெளி, கடவுளின் இரண்டாவது நிலையான விண்வெளியாக இயக்கம் பெறுகிறது. என்னிடம் பெற்ற இயக்கத்தை, பெற்ற வகைக்கு, எனக்கே திருப்ப விண்வெளி கடவுளின் மூன்றாவது நிலையான விசும்பாகி என்னை இயக்குகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

நான் என்ன கொடுக்கிறேனே, நான் என்ன கேட்கிறேனோ, அதையே கடவுள் எனக்குத் திருப்புகிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆகவே எனக்கு என்னென்ன தேவையோ அதையே கடவுளிடம் கேட்கவேண்டும் என்பதையும் அதற்காக நோற்றிருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

எனக்காக, என் தலைவிக்காக, என் பிள்ளைகளுக்காக, என் மருமக்களுக்காக, என் பேரக்குழந்தைகளுக்காக, நான்- தேவையான அனைத்தையும், கடவுளிடம் கேட்க வேண்டியதே, என்மந்திரம் என்பதையும் அதற்காக ஊக்கமுடன் நோற்றிருத்தலே தவம் என்பதையும் அறிவேன். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,485. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.