Show all

என் வாழ்க்கை எப்படி இருக்கும்?

வேறு ஒரு தளத்தில், ஆண் 20-3-1981, கன்னி ராசி ரிஷப லக்னம். என் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஒரு வினா என்னிடம் கேட்கப்பட்டது. இதுபோன்று நிறைய நிறைய வினாக்கள் என்னிடம் எழுப்பப்படுகிறது. அவை அனைத்திற்கும் ஒரு பொதுவான விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

06,தை,தமிழ்த்தொடராண்டு-5124: கணக்கிட்டுப் பார்த்ததில் இவருடைய அகவை 42 என்று தெரிகிறது. உறுதியாக பலரிடம், பல ஆண்டுகளாக இவர் தன்னுடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கேட்டிருப்பார். ஒரு பக்கம் சாதகம் சோதிடம் மூடநம்பிக்கை என்று இவரின் இந்த தேடல் முயற்சியைப் பகடியாடுவதையும் பட்டறிந்திருப்பார். மறு பக்கம் சாதகம் சோதிடம் இயல்அறிவு (சயின்ஸ்) என்று பேசி ஊக்குவிப்பதையும் இவர் பட்டறிந்திருப்பார்.

தொடர்ந்து இவர் இந்த முயற்சியைப் பொதுவெளியில் தொடர்வதில் இருந்து இவருக்கு இந்த வினாவிற்கு நிறைவான விடை இதுவரை கிடைத்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சோதிடம், சாதகத்திற்கான மூலம் எங்கே கிடைக்கப்பெறும்? சோதிடம் சாதகத்தின் மூலத்தை உருவாக்கியது யார்? சோதிடம் சாதகத்தின் மூலம் முதன் முதலாக எந்த மொழியில் உருவாக்கப்பட்டது. சோதிடம் சாதகம் பிழையான கணிப்பா? சோதிடம் சாதகம் உண்மையில்லையா? நமக்கு பலமுறை நல்லாதாகச் சொல்லப்பட்ட பலன் நடக்காமல் போனது ஏன்? என்கிற ஆயிரம் வினாக்கள் அவர் மனதில் எழுந்து கொண்டிருக்கும். 

அவருக்குக்கான அனைத்து வினாக்களுக்கான விடை தமிழில் மட்டுமே கிடைக்கும். சோதிடம், சாதகத்திற்கான மூலம் தமிழில் மட்டுமே கிடைக்கும். சோதிடம் சாதகத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் மொழியில் எழுதப்பட்டது. சோதிடம் சாதகம் சரியான கணிப்பே. சோதிடம் சாதகம் உண்மையே. நமக்கு பலமுறை நல்லாதாகச் சொல்லப்பட்ட பலன் நடக்காமல் போனதற்கான காரணம்: கமுக்கம் உடைந்ததும், அந்தப் பலன் மீது நாம் முன்னெடுக்கும் பரபரப்பும் என்பதே ஆகும்.

சோதிடம் சாதகத்தில் கடந்த காலத்திற்கு சொல்லப்பட்ட பலன் எல்லாமே சரியாக இருக்கும். அதனால்தான் சோதிடம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்காலத்திற்கு சொல்லப்பட்ட பலன் சிலருக்கு நடக்கவும் செய்கிறது. பலருக்கு நடக்காமல் போகிறது என்பதைக் கண்டுகொண்ட தமிழ்முன்னோர், அதற்கான காரணம்: பலனின் கமுக்கம் உடைந்ததும், அந்தப் பலன் மீது பலனாளி முன்னெடுக்கும் பரபரப்பும் என்று புரிந்து கொண்டு, சாதகம் சோதிடப் பயன்பாட்டிற்கு நாற்பது மதிபெண் அளித்து அதனினும் மேம்பட்ட கலையான கணியத்தை நிறுவினர். 

கணியம் அறிவோம் நூலை, https://amzn.to/3WiZ224 இந்த இணைப்பில் சென்று, அமேசான் கிண்டிலில் வாங்க முடியும். 

தமிழ்முன்னோர் நிறுவிய கணியம் பயன்பாட்டிலும்- கமுக்கம் உடைப்பு, பலனாளி முன்னெடுக்கும் பரபரப்பு ஆகியன தொடர்ந்த நிலையில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியப் பயன்பாட்டிற்கு அறுபது மதிப்பெண் அளித்து கணியத்தினும் மேம்பட்ட கலையான மந்திரத்தை மூன்றாவது முன்னேற்றக் கலையாக தமிழ்முன்னோர் நிறுவினர். 

இந்த மந்திர ஆற்றலை ஐந்து அகவைக்கு முந்தைய குழந்தைகளும், உலகில் பற்பல வெற்றியாளர்களும் இயல்பூக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் உலகில் பேரளவினர் இந்த ஆற்றலைத் தொலைத்து- அயலில், வழிகாட்டிகளை நம்பி பயணித்து கொஞ்சமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்த கொஞ்சமான பயன்பாட்டிற்கு பக்தியும் மதங்களும் பாடாற்றி வருகின்றன.

பேரளவான பயன்பாட்டிற்கு அனைவரும் மந்திரக்கலையைக் கற்று, அதன்வழி நோற்றாள் மட்டுமே உண்டு. இதைத்தான் திருக்குறள் இந்தக் குறளில் 
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
என்று முன்னெடுக்கிறது. 

கமுக்கத்தை உடைக்காமல், பரபரப்படையாமல் நீங்களே உங்களுக்கான அனைத்து வெற்றிகளையும் நேரடியாக கடவுளிடம் கேட்டுப்பெறும் வகைக்கு தமிழ்முன்னோரால் மந்திரக்கலை நிறுவப்பட்டுள்ளது. யாரிடமும் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று அலைந்து திரிய வேண்டாம். உங்கள் வெற்றியை நீங்களே தீர்மானிக்க முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே உருவாக்கி, உங்கள் விருப்பத்திற்கு சாதிக்க முடியும். வாழ்த்துக்கள்!

மந்திரம் அறிவோம். நூலை https://amzn.to/3whgVUn இந்த இணைப்பில் சென்று, அமேசான் கிண்டிலில் வாங்க முடியும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,499.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.