உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். 17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் வாழும் சீன ஆராய்ச்சியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஆராய்ச்சியாளர்களால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விலகியதால் உலக நலங்கு மையத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் பொதுப் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா முன்னெடுப்பில் உலக நலங்கு மையம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக அந்த அமைப்பு இயங்கியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதனால், உலக நலங்கு மையத்துடன் உள்ள அனைத்து உறவையும் முறித்துக் கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



