Show all

பொன்னியின் செல்வன் படம் நிறுத்தமா!

ரூ 250 கோடி செலவுத்திட்டத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் நிறுத்தமா, அதிகாரப்பாடாக தெரியவரும் தகவல் என்ன?

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மணி ரத்னம் இயக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 250 கோடி செலவுத்திட்டத்தில் மிகப்பேரளவாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிசா, அதிதி ராவ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. அதன்பின் கொரோனா காரணமாக படக்குழுவினர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டனர்.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு தான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இப்படத்தின் படப்பிடிப்பினால் மற்ற படங்களில் நடிக்க இயலாமல் போகும் என இப்படத்தில் இருந்து சில நடிகர், நடிகைகள் விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் 60விழுக்காட்டிற்கும் மேலாக நடத்த முடிவு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால், கொரோனவால் இயலாமல் போய் விட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் படப்பிடிப்புகளுக்கு அனுமதி தர முடியாது என்று அந்தந்த வெளிநாடுகள் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

இதனால், கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடப்பது மிகவும் கடினம் தான். ஏற்கவே இப்படத்தை எடுக்க முயற்சித்து எம்ஜியார் உள்ளிட்ட பல தமிழ் பேரறிமுகங்கள் கைவிட்டனர். ஆனால், இயக்குனர் மணி ரத்தினத்திற்கு இது கைக்கூடி வந்தது. இருந்தாலும் தற்போது இந்த படம் நிறுத்தம் என்பதாகத் தகவல் பரவி வருகிறது.

ஆனால் படம் நிறுத்தம் இல்லவேயில்லை. இப்படத்தை தொடங்க தாமதம் ஆவதால், மணிரத்னம் ஒரு காதல் படத்தை இந்த இடைவெளியில் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.