Show all

எங்கேயிருக்கிறது அதற்கான ஓட்டை! எண்ணிமத் தளத்தில் வெளியான, பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை, நேற்றே இயங்கலையில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

இணையத்தின் பேரளவான தொழில் நுட்பம், தொடர்ந்து வளர்வது சரிதான். இப்படி ஓட்டை உடைசல்களை அடைக்காமல் வளர்வதில் என்ன பொருள் இருக்க முடியும். 

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரைப்படங்கள் என்று மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி படங்கள் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேற்று எண்ணிம தளத்தில் வெளியீடு ஆன முதல் நாளே, அப்படத்தைத் தழிழ்ராக்கர்ஸ் களவாடி இணையதளத்தில் வெளியீடு செய்திருக்கிறது. எண்ணிமத் தளம் அமேசான் பிரைமில் வெளியானது போலவே படத்தை உயர்வரையறைத் தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது.

குறிப்பாக முதன்மையாளர்களுக்கு இந்தப் படத்தின் முதன்மைக்காட்சி நேற்று காட்டப்பட்டது, படத்தைப் பற்றி பலரும் நேர்மறையாக கருத்து தெரிவித்திருந்தனர். நடிகர் சூர்யா, ஒரு தயாரிப்பாளராகவும் பார்வையாளராகவும் தனக்கு படம் திருப்தி தந்திருப்பதாகக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமேசான் பிரைமில் படம் வெளியாகி சில மணி நேரங்களில் உயர்வரையறைத் தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது. 

இந்தத் தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை களவாடுவது தொடர் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவ்வப்போது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு இதேபோல புதுப்படங்களை வெளியீடு அன்றே இணையதளத்தில் வெளியிடுகிறது தமிழ்; ராக்கர்ஸ்.

தமிழ்ராக்கர்சில், தமிழ் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில திரைப்படங்களும் வெளியாகின்றன. திரையங்களில் வெளியாகும் நாட்களிலோ அல்லது அதற்கு முன்போ உயர்வரையறைத் தரத்தில் வெளியாகி வருவது திரைப்பட தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. 
இணையத்தின் பேரளவான தொழில் நுட்பம், தொடர்ந்து வளர்வது சரிதான். இப்படி ஓட்டை உடைசல்களை அடைக்காமல் வளர்வதில் என்ன பொருள் இருக்க முடியும். 

சொத்தை கத்திரிக்காயை, அழுகின தக்காளியை, வாடிய மலர்களை எந்த உழவராவது சந்தைப் படுத்துகின்றனரா? இணையத்தை வைத்து வணிகமாற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் இப்படி ஒட்டை உடைசல்களை அடைக்கமால் காசுபார்த்துக் கொண்டிருக்கிற நேர்மையின்மைதான் இப்படி களவாணிகளின் வளர்ச்சிக்கு காரணம் ஆகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.