உலகிலேயே தமிழினம் மட்டுமே இறப்பை நெடுஞ்சடங்காக பின்பற்றி வருகிறது. இறந்தவர்களை மண்ணில் புதைப்பதும், புதைத்த இடத்தில் நடுகல் நாட்டி வழிபடுவதும், ஆண்டுக்கு ஒருமுறை தெவம் கொண்டாடுவதும் என இறப்பில் மிகுந்த உளவியல் பாதிப்பு அடைகிற இனமாக இருக்கிறது தமிழினம். அந்த இறப்பைக் கூட முறையாக பின்பற்றவியலாத, 25ஆண்டுகள் காத்திருந்த சோகம் ஈழமண்ணில் ஒரு தமிழனுக்கு நேர்ந்தது. 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம் இறந்தவர் உடலுக்கு அண்மையில் இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இலங்கை யாழ்பாணம் சாவகச்சேரியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராசு இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து இத்தாலிக்கு வேலை நிமித்தமாக சென்றார். இத்தாலியில் ஒரு உணவகத்தில் வேலை பார்த்த இவர் அவ்வப்போது தனது குடும்பத்தினரையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இத்தாலியில் இருக்கும் போது மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். அப்போது இலங்கையில் தமிழினத்தின் மீது நிழ்த்தப் பட்ட இறுதி போர்க்காலம் என்பதால் அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வரமுடியவில்லை. இந்நிலையில் இத்தாலியில் இருந்த ஸ்டீபனின் உறவினர்கள் அவரது உடலை 25 ஆண்டுகளுக்கு பதப்படுத்தும்படி செய்து வைத்தனர். இந்தத் தகவலை ஸ்டீபனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. அதன் பின்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின்பு அந்த தகவல் ஸ்டீபனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது அவர்களிடம் ஸ்டீபனின் உடலை இலங்கைக்கு கொண்டு வந்து அங்கு இறுதி சடங்கை நடத்த பணமில்லை. இந்நிலையில் ஸ்டீபனின் உறவினர்கள் அவரது உடலை 25 ஆண்டுகள் பதப்படுத்தி வைத்திருந்த காலம் முடிவுவடையும் நிலை வந்தததால் அவரது உடலை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு கொண்டு வந்து அவருக்கான இறுதி சடங்கை நடத்தினர். உலகின் மூத்த குடியைச் சேர்ந்த ஒரு தமிழன் தனக்கான மண்உடைமை இல்லாமல், இறந்து 25 ஆண்டுகளுக்கு பின்பு அவருக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்ட சோகம் பேசப்பட்டு பெரும் தீயாக பரவி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



