பிரபல இயங்கலை விற்பனை தளமான அமேசான் அதிவேக அகன்றஅலை சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். 27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இணையச் சேவைகளை வழங்க அமேசான் 'புராஜக்ட் குய்பர்' என்னும் அதிரடி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாம். இந்தத் திட்டத்தின்படி, 3,236 செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த உள்ளனராம். இதன் மூலம் குறைவான நேரத்தில் அதிவேக இணையச் சேவையை வழங்க முடியுமாம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என்றம், இந்தத் திட்டத்தை சாத்தியப்படுத்தியதும், இணையவசதி கிடைக்காத பல கோடிக் கணக்கான மக்களுக்கு இணைய வசதி எளிதாக கிடைக்கும் என அமேசான் குறிப்பிட்டுள்ளது. மேலும், அமேசான் இணைய கட்டணத்தை ஜியோவைக் காட்டிலும் குறைவாக நிர்ணயம் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஜியோவின் ஜிகாபைபர் திட்டத்திற்கு கடும் போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



