Show all

ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும்! உச்சஅறங்கூற்றுமன்றம்

ரபேல் வழக்கின் மீதான மறுசீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அறங்கூற்றுவர்கள் அமர்வு இன்று தெரிவித்துள்ளது. இது இந்திய உச்சஅறங்கூற்றுமன்றத்தின் வரலாறு காணாத தீர்ப்பு என்று அனைத்துத் தரப்பாலும் பாராட்டப் பட்டு வருகிறது.

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்தத்தில், முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டுமென்று பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

ஐந்து மாதங்களுக்கு முன்பு, இந்த வழக்கின் போது- மோடி அரசின், தலைமைஅமைச்சர் அலுவலகம்  உச்சஅறங்கூற்றுமன்றத்திற்கு வழங்கிய பொய்யான தகவல்கள் அடிப்படையில், உச்சஅறங்கூற்றுமன்றம் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை தன் தீர்ப்பில் கூறியிருந்தது.

 இதனையடுத்து ரபேல் வழக்கில் மோடி அரசின், தலைமை அமைச்சர் அலுவலகம்  உச்சஅறங்கூற்றுமன்றத்திற்கு வழங்கியது பொய்யான தகவல்கள் என்றும், உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும், தீர்ப்பை மறுசீராய்வு செய்யவேண்டும் எனவும், பல்வேறு மனுக்கள் பதிகை  செய்யப்பட்டன. 

மேலும், இந்து நாளேடு: இதுதான் உண்மையான ராபேல் ஆவணங்கள்! உச்சஅறங்கூற்று மன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதற்கு தோதாக பொய்யான ஆவணங்களை உச்ச அறங்கூற்றுமன்றத்திற்கு தலைமை அமைச்சர் அலுவலகம் வழங்கியிருந்தது என்று ஒரு நூலே வெளியிட்டது. அந்த நூலும் இரண்டு மணி நேரத்தில் 8000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இரண்டு இலட்சம் பிரதிகள் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டன.

மோடி அரசின் தலைமை அமைச்சர் அலுவலகம், ராபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டன என்றும், திருடியவர்கள் இந்து இதழியல் நிறுவனம்தான் என்றும், என்று குற்றம் சாட்டி விட்டு, இந்து வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தக் கூடாது என்று- எங்கப்பன் இந்தக் குதிருக்குள் இல்லவே யில்லை என்ற பாணியில்,  மோடி அரசின் தலைமைஅமைச்சர் அலுவலகம் உச்சஅறங்கூற்று மன்றத்திற்கு கோரிக்கை வைத்து வந்தது. 

மோடிஅரசின் தலைமைஅமைச்சர் அலுவலகத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்றுதான் முதலில் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த உச்சஅறங்கூற்றுமன்றம்:

இன்று உச்சஅறங்கூற்று மன்றம்: மோடிஅரசின், தலைமைஅமைச்சர் அலுவலகத்தின், 'எங்கப்பன் இந்தக் குதிருக்குள் இல்லவே யில்லை என்ற பாணியில் வைக்கப்பட்ட கோரிக்கையை உறுதியாக நிராகரித்துள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், ஆவணங்கள்மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரபேல் வழக்கில் இந்து இதழில் வெளியான ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூறியுள்ளது. இதன் காரணமாக, மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும்,

இந்த வழக்கின் விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என  தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அறங்கூற்றுவர்கள் அமர்வு தெரிவித்தது. 

ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக, பாஜக அரசுமீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த குற்றச்சாட்டிற்கு முழுமையாக விடிந்திருக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.