Show all

கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகைக்கு விலையில்லா தடுப்பூசி! துபாயில் இன்று முதல் களமிறக்கம்

துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகைக்கு- துபாயின், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் பைசர் பயோ என் டெக் என்ற தடுப்பூசி விலையில்லாமல், இன்று முதல் களமிறக்கப் படுகின்றது.

துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் அபுதாபியில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்ல முடிவுகளை பெறப்பட்டதை அடுத்து அபுதாபி, துபாய் உள்ளிட்ட பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அபுதாபியில் அனைத்து அரசு நலங்குச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துமனைகள் அனைத்திலும் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் பைசர் பயோ என் டெக் என்ற கொரோனா தடுபூசியானது துபாயில் விலையில்லாமல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அனைவருக்கும் விலையில்லாமல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.