தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசனின் புதிய படத்திற்காக 10 இயக்குனர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு. கன்னட மறுதயாரிப்பு படமாக இப்படத்தில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். மூன்று ஆண்டுகளாக அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மப்டி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அதிரடியாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மப்டி மறுதயாரிப்பு படத்தின் தமிழ் தலைப்பு மற்றும் இயக்குனர்களை அறிவிக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இன்று தலைப்பின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை தமிழ் திரைப்படத்தில் இருக்கும் 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி தொலைக்காட்சித் தொடர்கள் மாதிரி, சிம்புவின் மப்டி படவேலைகளைப் படிப்படியா நகர்த்தறாங்களே என்று அங்கலாய்க்கின்றனர் சிம்புவின் கொண்டாடிகள்.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சிலம்பரசன் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து, தன்னுடைய வழக்கமான நடைமுறைகளையும் மாற்றிவிட்டார். சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



