அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு, இந்தியாவில் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது. 13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மனித உரிமைகள் தொடர்பான முன்னெடுப்புகளில் தனி கவனம் செலுத்தும் பன்னாட்டு அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவில் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு முறைகேடாக வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டியது. அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என அரசு கூறியது. இந்த மாத தொடக்கத்தில் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டன. இந்திய அரசின் செயல்களை சூனிய வேட்டை எனக் கூறியுள்ள அந்த அமைப்பு, இந்திய அரசு தங்களைப் பழி வாங்குவதாக தெரிவித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் செயல்பாடுகளை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது. அதில் தங்கள் அமைப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது செப்டம்பர் நாளை தெரியும் என்றும், இதன் காரணமாக அதன் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது. இந்திய மற்றும் பன்னாட்டுச் சட்டங்களின் படியே தங்கள் செயல்பாடுகள் உள்ளதாக கூறி உள்ளது. அம்னெஸ்டடி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவின் செயல் இயக்குநர் அவினாஷ் குமார், “அண்மையில் டெல்லி கலவரத்தின் காவல்துறையின் பங்கும் மற்றும் டெல்லி கலவரம், ஜம்மு காஷ்மீர் சிக்கலில் இந்திய அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டோம். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதனை அடுத்து தொடர்ந்து எங்களை பல்வேறு வழிகளில் அரசு துன்புறுத்தி வருகிறது,” என குற்றஞ்சாட்டி உள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



