Show all

ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் பருவம் நான்கு நிகழ்ச்சி!

பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் எந்த அளவு உண்மையென்றுதான் தெரியவில்லை.

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் எந்த அளவு உண்மையென்றுதான் தெரியவில்லை.

பெரும்பாலான சன்தொலைக்காட்சி கொண்டாடிகளை, விஜய் தொலைக்காட்சி- தங்கள் பக்கம் ஈர்க்க காரணமானதுதான், கமல் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சிக்கு வந்த கொண்டாடிகள் யாரும் சன் தொலைக்காட்சிக்குத் திரும்பவேயில்லை. காரணம் சன் தொலைக்காட்சியின் காண்போரை பரபரப்பிலேயே வைத்திருக்க முயலும் தொடர்கள்தாம். விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் அப்படியில்லை. கதைத்தலைவன் தலைவிக்கு கொடுக்கும் சோதனைகளுக்கு சிறிய எல்லையே வைத்திருப்பார்கள். ஆனால் சன் தொலைக்காட்சி நாடகங்கள் கதைத்தலைவன் தலைவிக்கு கொடுக்கும் சோதனைகளுக்கு எல்லையே இருக்காது.

ஒயாமல் திட்டிக் கொண்டே அனைவரும் தவறாது பார்க்கும் ஒரு நிகழ்ச்சிதான் கமல் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. அதன் நான்காவது பருவம் வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்க உள்ளது. 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் என்பதாக ஒன்று வெளியாகி உள்ளது.

அந்தப் பட்டியலில், நடிகை ரேகா, சனம் செட்டி, ரம்யா பாண்டியன், சிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிசா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. 

மிக விலைஉயர்ந்த புறணி பேசும் நிகழ்ச்சி என்பார் சீமான், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை. ஆம் உண்மைதான். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் பெரும்பாலும் நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு புறணி நல்ல விளம்பரமாகவே அமைந்து விடுகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.