கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி மையத்திற்கு, எலியும் பயணம் செய்ததா? என்றவொரு கேள்வி எழுப்பி ஒரு காணொளியையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர் சில ஐயப்பாட்டுப் பேர்வழிகள். 20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்கள் அனைத்துலக விண்வெளி மையத்திற்கு பயணிக்கிறார்கள் என்றதுமே தொண்டை வரை வந்து சிக்கி, ஊகூம் அவ்வளவு கவனக் குறைவாகவெல்லாம் இருக்க மாட்டார்கள் என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ள வைத்த கேள்வி! வீரர்கள் இருவருக்கும் முறையான கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு, கொரோனா அவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்திருந்திருப்பார்களா? என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி மையத்திற்கு, எலியும் பயணம் செய்ததா? என்றவொரு கேள்வி எழுப்பி ஒரு காணொளியையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர் சில ஐயப்பாட்டுப் பேர்வழிகள். ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் இரு விண்வெளி வீரர்களுடன் ஒரு எலியும் பயணம் செய்ததாக கீச்சுவில் கிளப்பிவிட்டுள்ளனர். இது தீயாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு பயணம் செய்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 விண்கலம். இதில் நாசாவின் வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகிய இருவர் பயணம் செய்தனர். இரு வீரர்களும் அனைத்துலக விண்வெளி மையத்தை அடைந்ததும் இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு விண்வெளி வீரர்களுடன் ஒரு எலியும் சென்றுள்ளதாக கீச்சுவில் தகவல்கள் தீயாக்கப்பட்டு உள்ளது. விண்கலம் ஏவப்பட்ட போது எடுத்த காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள இணைய இடுகையாளர்கள், எலி போன்று ஒன்று ஓடுவதை குறிப்பிட்டு இவ்வாறு பரப்பி வருகிறார்கள பால்கான் 9 விண்கலத்தின் சூடான என்ஜின்களை சுற்றி ஒரு மர்ம பொருள் சுற்றி வருவதை காணொளியில் சுட்டிக் காட்டியுள்ளனர். அது பார்ப்பதற்கு சாம்பல் நிறத்தில் உள்ளதால், அதை எலி என்றே முடிவு செய்துவிட்டனர். அந்தக் காணொளியை வெளியிட்ட ஒருவர் நீங்கள் என்ன சொன்னாலும் சரி, அது எலிதான் என்றார். வலையொளியில் வெளியான இந்தக் காணொளியில் 11 வினாடிகள் எலி போன்று ஒன்று ஓடுவதாக கூறுகிறார்கள். எனினும் சிலர் அது திட ஆக்ஸிஜனின் ஒரு பகுதி என்றும் திரவ ஆக்ஸிஜனாக மாறி பால்கான் 9 விண்கலத்திலிருந்து வெளியேறும் போது வெற்றிடம் உறைந்ததுதான் அது என்கிறார்கள். எனினும் இதுகுறித்து நாசா எந்த விளக்கத்தையும் இன்னும் கூறவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



