சவுதி சிறப்பு பணத்தாளில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சவுதி அரேபியாவில் வளரும்நாடுகள் 20 மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு சிறப்பு பணத்தாள் ஒன்றை கடந்த 8,ஐப்பசி சனிக்கிழமை (ஆக்டோபர்) சவுதி அரசு வெளியிட்டது. அந்த நோட்டில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் சிறிவஸ்தவா கூறியதாவது: இதுகுறித்து சவுதி அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சவுதி சிறப்பு பணத்தாளில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



