Show all

நடிகை காஜல்அகர்வால் திருமணம்!

மும்பையில் இன்று நடிகை காஜல்அகர்வால் திருமணம்.

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை காஜல் அகர்வாலுக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும், இன்று மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் எடுத்த படங்களையும், வருங்கால கணவருடன் உள்ள படங்களையும், தன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் பகிர்ந்துள்ளார். திரைஉலகினர் பலரும், புதுமண இணையருக்கு  வாழ்த்து கூறி வருகின்றனர்.

காஜல் அகர்வாலுக்கு அகவை 35ஆண்டுகள் நான்கு மாதங்கள் பதினோரு நாட்களாம். இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். 

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. 

ஏராளமான வெற்றித் திரைப்படங்களுடன் தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி மின்மினியாக உலா வருகின்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.