குறைந்த விலையில் நிறைந்த ஆற்றல்; மிக்க கருவியாக பல புதிய அம்சங்களுடன் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது புதிய மின்சக்திவங்கியை சியோமி நிறுவனம் 32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சியோமி நிறுவனம், 30,000 எம்.ஏ.எச் மின்சக்தியை சேமிக்கும் வகையான புதிய மின்சக்தி வங்கியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய மின்சக்திவங்கி பயனர் ஒரு முறை மின்னேற்றம் செய்து வைத்துக்;கொண்டால், சுமார் 10 முறை அவர்களின் மிடுக்குப்பேசியை அதில் மின்னேற்றம் செய்துகொள்ள முடியுமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் இந்தப் புதிய மின்சக்திவங்கி சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து காண்போம். இந்த மின்சக்திவங்கி விரைவாக மின்னேற்றம் செய்து கொள்ளும் வகையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்சக்திவங்கி ஒரே நேரத்தில் உங்களுடைய மூன்று சாதனங்களை மின்னேற்றம் செய்ய அனுமதிக்கிறது. அதுவும், இதில் விரைவான மின்னேற்றம் அதேசமயம் குறைவான மின்னோட்ட வகையான சாதனங்களையும் இதில்; மின்னேற்றம் செய்து வகைக்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மின்சக்திவங்கியின் திறப்பு பித்தானை இரண்டு முறை கிளிக் செய்து குறைந்த மின்னோட்ட வகைக்கு மாற்றிக்கொண்டு மிடுக்குக் கடிகாரம் ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ், படக்கருவி போன்ற குறைந்த மின்னோட்டம் தேவைப்படும் சாதனங்களை நீங்கள் பாதுகாப்பாக மின்னேற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கின்றார்கள். முந்தைய தலைமுறை மின்சக்திவங்கி சாதனத்தை விட இதில் பல அம்சங்களை சியோமி நிறுவனம் கணிசமாக அதிகரித்துள்ளது. முதற்கட்டமாகச் சீனாவில் வருகிற வியாழக்கிழமை முதல் சியோமி வலைத்தளத்தில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் உலகளாவிய அறிமுகம் எப்பொழுது என்றும், இந்திய சந்தையில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படுமென்றும் இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்திய மதிப்பின்படி இந்த மின்சக்திவங்கி தோராயமாக ரூ.1800 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



