Show all

தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! கொரோனாவால் இன்று மட்டும் 38 பேர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று மட்டும் 38 பேர்கள் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். இதனால் தளர்வுகளில் விடுவிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது கொரோனா நமக்கு அளிக்கும் எச்சரிக்கையாகும்.

32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று மட்டும் 38 பேர்கள் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேர்களுக்குக் கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக நலங்குத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
கொரோனா நுண்ணுpயிரித் தொற்றைக் கட்டுப்படுத்த என, நடுவண் அரசால், இந்தியா முழுமைக்கும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவுக்கு இன்னும் இரண்டுகிழமைகள் ஊரடங்கைத் தொடரவேண்டும்.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூட தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசும் இந்த இரண்டு கிழமைக்கு நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு விவரங்கள் நலங்குத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக நலங்குத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 23 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 10 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40,638 லிருந்து 44,661 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 435 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது.

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 79 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 7,10,599 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் நலங்குத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.