பெரியார் இருந்த வரை தமிழகத்தில் யாரும் ஹிந்துத்துவா தொல்கதை புளுகு மூட்டைகளைத் தூக்கிப் பிடிக்க அஞ்சி ஒடுங்குவர். கொஞ்ச காலமாக சில ஹிந்துத்துவா பரப்புரையாளர்கள் தமிழகத்தில் துள்ளி வந்து கொண்டிருந்தார்கள். திடீரென ஆப்பு கழன்று போனவர்களாக இணையத்தில் நிறம் மாறி உலா வருகிறார்கள். காரணம் துபாயில் இருந்து வந்த ஒரு எச்சரிக்கையாம். 08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலகமே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக ஹிந்துத்வாவினரால் தவறான கருத்துப் பரப்புதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வளைகுடாவில் வசிக்கும் ஹிந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து தலைமைஅமைச்சர் மோடி, தனது கீச்சுப் பக்கத்தில், “கொரோனா நுண்ணுயிரிக்கு மதம் கிடையாது, இதில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவை எதிர்க்க வேண்டும். சகோதரத்துவம்தான் நமது கொள்கை” என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதுவர் பவன் கபூர் ஐக்கிய அரபு வாழ் இந்தியர்களை, சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்திருத்துள்ளார், “இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் நல்ல உறவு உண்டு, இருவருக்கும் இடையே எந்த பாகுபாடும் இல்லை. எனவே பாகுபாடு காட்டுவது சட்டத்திற்கு எதிரானது. இதனை இந்தியர்கள் உணர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பீதியில்தாம் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் முஸ்லிம்களுக்கு திடீர் பாராட்டு மழை பொழிந்திருக்கின்றார்கள். பிற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கும் வகைக்கு தங்களது பிளாஸ்மாவை வழங்க முன் வந்துள்ள தப்லீக் ஜமாத்தினருக்கு எஸ்வி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜக வை சேர்ந்த எஸ்வி சேகர் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கி பதிவிட்டு வருவார். ஒட்டு மொத்த ஹிந்துத்வா கொள்கையினரும் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துப் பரப்பி வந்தனர். இது இப்படியிருக்க திடீர் திருப்பமாக முஸ்லிம்களைப் பாஜகவினர் பாராட்ட தொடங்கிவிட்டனர். இதுகுறித்து எஸ் வி சேகர் கீச்சுவில் இட்டுள்ள பதிவில், “கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுமேற்கொண்டு வரும் நிலையில், பிளாஸ்மா ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை. என்று பதிவிட்டுள்ளார். இதேபோல பாஜகவின் நாராயணன் என்பவரும் முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் குறித்து கடுமையான பகடியாடல்கள் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



