சீனா நிறுவனங்கள் தயாரித்து அளித்த கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளின் துல்லியமின்மை காரணம் பற்றி இரண்டு நாட்களுக்கு அதன் மூலமான பரிசோதனை நிறுத்தப்படுகிறது. 08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கரோனா நுண்ணுயிரி பாதிப்பைக் கண்டறியும் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், தரத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் பயன்பாட்டை நிறுத்தியதாக இராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், துல்லியத்தன்மை, தரமின்மை குறித்து நாங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு தெரிவித்துள்ளோம். எங்கள் மாநில மருத்துவக் குழுவின் பரிந்துரையின்படி அந்தக் கருவியால் பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டோம். அந்தக் கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் அனைத்தையும் திருப்பி அனுப்புகிறோம். இதுவரை அந்தக் கருவியால் 168 பரிசோதனைகள் செய்தோம். அதில் நேரடியாக கொரோனா இருப்பதைக் கட்டும் பாலிமரைஸ் சங்கிலி எதிர்வினைக் கருவி மூலம் கொரோனா உள்ளது என்று தெரிந்தவருந்கு சீனாவிலிருந்து வந்த அதிவிரைவு அடையாளங்காட்டியில் பரிசோதித்தால் கொரோனா இல்லை என்று வருவது அதிர்ச்சியை எற்படுத்துவதாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. மாநில நலங்குத்துறையின் கூடுதல் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், அதிவிரைவு அடையாளங்காட்டிகள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழத்திலிருந்து 30 ஆயிரம் அதிவிரைவு அடையாளங்காட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் கருவிகளை மாநில அரசு விலைக்கு வாங்கியது. இப்போது சீனக் கருவியிலிருந்து முடிவுகள் தவறாக இருப்பதால், பழையபடி மாநில அரசு சார்பில் வாங்கிய, நேரடியாக கொரோனா இருப்பதைக் கட்டும் பாலிமரைஸ் சங்கிலி எதிர்வினைக் கருவி மூலம் பரிசோதனைகளை தொடங்கிவிட்டோம்; எனத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இரண்டு நாட்களுக்கு கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம் சோதனை செய்வதை நிறுத்துமாறு இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் தயாரிப்புக்கான அடிப்படையில் பிழையில்லை என்றும், அவசரமாக தயாரிக்கப்பட்ட அதன் துல்லியம் அல்லது தரத்தில்தாம் பிழை என்றும், இந்திய நிறுவனங்கள் தயாரித்து அடுத்த மாதத்தில் வெளிவர இருக்கிற கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளில் இந்தக் குழப்பம் இருக்காது என்று தெரியவருகிறது. இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் கொரோனா பரவும்வேகம்தரும் நெருக்கடி தவிர வேறொன்றுமில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



