மலேசியத் தலைமைஅமைச்சர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை. இதற்காக இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் ஏற்படும் தாக்கம் பற்றி நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். 05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலை பெற்ற இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு, சட்டப்பிரிவு 370ன் மூலம் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்குவது என்ற நிபந்தனையோடு காஷ்மீர் அன்றைக்கு இந்தியாவோடு இணைத்துக் கொள்ளப் பட்டது. கடந்த மாதம் இந்தியாவை ஆளும் பொறுப்பு கிடைக்கப்பெற்றுள்ள பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, இதன் மீதாக- இந்தியா காஷ்மீர் மீது ஆக்கிரமிப்பை முன்னெடுத்துள்ளதாக கருத்து தெரிவித்தார். மலேசிய தலைமை அமைச்சரின் கருத்து இந்தியாவை ஆளும் பாஜக அரசுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைக்க அரசு திட்டமிட்டது. மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிகம் பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கும் இந்தியா, இறக்குமதியை நிறுத்தும் பட்சத்தில் அந்நாட்டின் வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து பேசிய மலேசிய தலைமைஅமைச்சர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். மகாதீர் முகம்மது கூறுகையில், ‘நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை. எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் ஏற்படும் தாக்கம் பற்றி நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,313.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.