மேட்டூர் அணை, கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், மேட்டூர் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். இணைய ஆர்வலர்கள் ‘மழைத் தெய்வம் தமிழருக்கு ஆதரவானதுதான். மகிழ்ச்சியா மதுமிதா’ என்று இணையப் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள். 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘மழைத் தெய்வமும் கர்நாடகக்காரர் போல’ என்று கவிதை பாடி, கவின் கும்பலால் கையைக் கிழித்துக் கொண்டு தனியார் தொலைக்காட்சியின் போட்டி நிகழ்ச்சியில் இருந்து வருத்தத்தோடு வெளியேறினார் நடிகை மதுமிதா. மேட்டூர் அணை, கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அந்த நினைவுகளோடு பொருத்தி மகிழ்ச்சியை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் இணைய ஆர்வலர்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி கழிமுக மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதையொட்டி காவிரி கழிமுக மற்றும் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் வேளாண்மைக்குத் தண்ணீர் தேவையும் குறைந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டில் மேட்டூர் அணை ஏற்கனவே இருமுறை நிரம்பிய நிலையில், இன்று 3வது முறையாக நிரம்பி உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்ட மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,314.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த ஆண்டில் 3வது முறையாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. வரலாற்றில் கடந்த 86 ஆண்டுகளில் 44வது முறையாக அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.