Show all

கொரோனாவை எளிதாகக் கண்டறிய புதியதொரு கருவி!

கொரோனாவைப் பத்தே நிமிடத்தில் கண்டறிய புதியதொரு உணரி (சென்சார்) பரிசோதனைக் கருவியை, அமெரிக்க இயல்அறிவர்கள் உருவாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. 

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க இயல்அறிவர்கள் பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் உணரி (சென்சார்) பரிசோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர்

உலக அளவில் கொரோனா பரிசோதனைகள் சாதாரண மக்களால் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்துவருகின்றன. அரசு சார்பில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. சோதனை செய்து கொண்டாலும் ஒரு நாள் கழித்தே முடிவுகளும் கிடைக்கின்றன. தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் குறைந்த விலை உணரி பரிசோதனைக் கருவியை அமெரிக்க இயல்அறிவு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த உணரிக் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்தப் பரிசோதனைக் கருவி கிராபேன் உதவியுடன் தயாரிக்கப்பட்டு மற்றோரு உணரியுடன் இணைக்கப்பட்டது. அது இரத்தம், உமிழ்நீர், வியர்வையின் மூலம் நோய் பாதிப்பைக் கண்டறியும்.ஒரு நெகிழி அட்டையில் அமைக்கப்பட்ட இந்த உணரியில் முப்பரிமான கிராபேன் அமைப்பு உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.