ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால், பாஜகவையும் வீழ்த்தலாம்- காங்கிரசும் வளரும் என்பதாகப் பெரும்பான்மையோர் வாக்களித்துள்ளனர். 20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரசில் இராகுல் காந்தியை பெருந்தலைகள் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் வளர்வதற்கும் தன்னூக்கமாக பெருந்தலைகள் எந்த முயற்சியிலும் ஈடுபடுவதும் இல்லை. குறள் 448: வேளாண் சட்டவரைவுகள் மூலம்- உழவர்கள் வயிற்றில் நெருப்பை மூட்டிதால்- இந்த குறள் அடிப்படையில் பாஜக கெட்டுச் சீரழிவதற்கு அணியமாகியே வருகிறது. ஆனால் இதை தமக்கான அறுவடை ஆக்கிக் கொள்ளும் நிலையில் காங்கிரசை முன்னெடுக்க முயலவேயில்லை காங்கிரஸ் பெருந்தலைகள். ஆனால் ஒற்றைப்போராளியாக, பாஜகவுக்கு எதிராக இராகுல்காந்தி நீண்டகாலமாக போராடித்தான் வருகிறார். தற்போது பிரியங்காவும் களமிறங்கியிருக்கிற நிலையில், வடஇந்திய மக்கள் காங்கிரசை ஒரு வெளிச்சமாக பார்க்கத் தொடங்கியிருப்பது தெரிய வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு இயங்கலை இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் களமிறங்கினால், பாஜகவையும் வீழ்த்தலாம்- காங்கிரசும் வளரும் என்பதாகப் பெரும்பான்மையோர் வாக்களித்துள்ளனர். அந்த வகைக்கு முயலுமா காங்கிரஸ் என்பதுதாம் மக்கள் முன் நிற்கிற கேள்வியாக உள்ளது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



