கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களிலேயே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சியை தயாரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது. 18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இறைச்சிக்காக உலகெங்கிலும் அன்றாடம் ஏராளமான கோழி, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையில், கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களிலேயே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சியை தயாரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது. விலங்குகளின் உடல் திசுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட செல்களைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான உற்பத்தி செலவானது மிகவும் அதிகமாகும். உலகிலேயே முதல்முறையாக ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்வதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஈஸ்ட் ஜஸ்ட் என்ற நிறுவனம் ஆய்வக இறைச்சியை விற்பதற்கான சிங்கப்பூர் அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இது தொடர்பாக ஈஸ்ட் ஜஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஷ் டெட்ரிக், “விலங்குகளில் உயிரணுக்களில் இருந்து, நேரடியாக உண்மையான மற்றும் உயர்தர மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பான இறைச்சி உருவாக்கப்படுகின்றது. இந்த இறைச்சி துண்டுகளாக அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும். இதன் விலை 50 அமெரிக்க டாலராக அதாவது ரூ.3692 ஆக இருக்கும். ஆய்வக இறைச்சி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவிக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



