Show all

உண்மை என்கிறதா பென்டகன்! வேற்றுக் கோள் மனிதர்கள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுக்கள்

இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, வேற்றுக் கோள் மனிதர்கள் நம்மை விட அறிவாற்றலிலும், தொழில் நுட்ப ஆற்றலிலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில்- பெரும்புதிராக- புலனாகாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அறிவாற்றல் எவ்வளவு உயரமானதாக இருந்தாலும் நாமும் அதை எட்டவே முடியும். அவர்களின் மொழி, சமூக கட்டமைப்பு எவ்வாறானதாக இருக்கும்? அவர்களோடு நாம் ஒருங்கிணைய  முடியுமா என்பதே நமது தேடல்.

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: வேற்றுக் கோள் மனிதர்கள்;, பறக்கும் தட்டுகள் பற்றி முதன்மையான அறிவிப்பு ஒன்றை பொதுவில் அறிவிக்க அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முடிவு செய்துள்ளது. 

வேற்றுக் கோள் மனிதர்கள் (ஏலியன்கள்) பயன்படுத்தும் வாகனங்கள் என்று நம்பப்படும் பறக்கும் தட்டுகள் குறித்து கடந்த சில கிழமைகள் முன் அமெரிக்கா அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியிட்டது. 

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முதல்முறையாக அதிகாரப்பாடாக பறக்கும் தட்டு வகை விமானங்களின் காணொளிகளை வெளியிட்டது. பல ஆண்டுகளாக பறக்கும் தட்டு குறித்து நிறைய வதந்திகளும், சந்தேங்களும் நிலவி வந்தன. இந்த நிலையில் இது தொடர்பாக பென்டகன் அதிகாரப்பாடாக காணொளி வெளியிட்டு, பறக்கும் தட்டு உண்மையாக இருக்கலாம் என்று கூறி பீதி கிளப்பியது. 

இதுவரை எந்த நாட்டு அரசும் இது போன்ற காணொளிகளை அதிகாரப்பாடாக வெளியிட்டது கிடையாது. ஆனால் முதல் முறையாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பாடாக பறக்கும்தட்டு வகை விமானங்களின் காணொளிகளை வெளியிட்டுள்ளது. இந்தக் காணொளியில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது. 

இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தற்போது இதில் மேலும் புதிய தகவலை அதிகாரப்பாடாக பென்டகன் வெளியிட உள்ளது வேற்றுக் கோள் மனிதர்கள் (ஏலியன்கள்) குறித்து தாங்கள் செய்த ஆராய்ச்சிகளையும், பறக்கும் தட்டு குறித்து நிகழ்த்திய கண்டுபிடிப்புகளையும் பொதுவில் வெளியிட பென்டகன் முடிவு செய்துள்ளது. 

என்ன மாதிரியான கண்டுபிடிப்புகளை பென்டகன் வெளியிட போகிறது என்ற பீதி தற்போது ஏற்பட்டுள்ளது. வேற்றுக் கோள் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்தவரும், பென்டகனில் வேற்றுக் கோள் மனிதர்கள் ஆராய்ச்சி குழுவில் பணியாற்றியவருமான எரிக் டேவிஸ் இதை உறுதி செய்துள்ளார். 

அதில், பறக்கும் தட்டு குறித்து பென்டகன் முதன்மையான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறது. புவிக்கு அப்பாற்பட்ட சில பாடுகள் இருக்கிறது. புவியில் உருவாக்கப்படாத சில பாடுகளை பென்டகன் கண்டுபிடித்துள்ளது. 

இந்தப் பாடுகள், பொருட்களை மனிதர்கள் உருவாக்கவில்லை. புவிக்கு வெளியே யாரோ உருவாக்கி உள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. தற்போது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இந்த பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது. 

கடந்த ஆண்டுவரை செயல்பட்டு வந்த ‘பறக்கும் தட்டு அதிரடி படை’ மூலமும் இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதில் புவியில் உருவாகாத பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். பென்டகன் இதை பொதுவில் அறிவிக்க உள்ளது. 

2007ல் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பாடுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம், என்று அவர் அறிவித்துள்ளார். முன்னாள் செனட்டர் ஹாரி ரெய்டு, செனட்டர்கள் மார்கோ ரூபியோ, சிபிஎஸ் மியாமி ஆகியோர் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். ஆனால் என்ன மாதிரியான அறிவிப்புகளை பென்டகன் வெளியிடும் என்று இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, வேற்றுக் கோள் மனிதர்கள் நம்மை விட அறிவாற்றலிலும், தொழில் நுட்ப ஆற்றலிலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில்- பெரும்புதிராக- புலனாகாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அறிவாற்றல் எவ்வளவு உயரமானதாக இருந்தாலும் நாமும் அதை எட்டவே முடியும். அவர்களின் மொழி, சமூக கட்டமைப்பு எவ்வாறானதாக இருக்கும்? அவர்களோடு நாம் ஒருங்கிணைய  முடியுமா என்பதே நமது தேடல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.