செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. 10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்தியதால்- செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக செயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்னதாக:- முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதேபோல செயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க வாரிசுகள் என்ற அடிப்படையில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என செயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த அறங்கூற்றுவர்கள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்: மேலும், செயலலிதாவின் நேரடி வாரிசுகள் என தீபாவையும் தீபக்கையும் இந்த உயர் அறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது. எனவே, செயலலிதா வசித்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து இருவரும் சட்டப்படி அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாமேயன்றி, தேவையற்ற வம்புகளில் ஈடுபடக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினர். மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்திருந்தது. அந்த அவசரச் சட்டத்தின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டு இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், செயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சீரியல் அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு வைப்பு செய்தது. இழப்பீட்டு தொகையைச் செலுத்தியதால் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் நகர சீரியல்; அறங்கூற்றுமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
திருமணமாகாத செயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதால் தீபாவும், தீபக்கும் அவரது நேரடி வாரிசுதாரர்கள் ஆவர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



