Show all

மோடி மட்டுமே உலகப்பயணம் மேற்கொண்டிருந்த நிலைமையை மாற்றிப் போட்டுள்ளதா கொரோனா! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரஷ்யா பயணம்

இரஷ்யாவில் நடக்கும் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரஷ்யா பயணம்

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தொன்பதாவது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலைமை அமைச்சர்  மோடியின் கிர்கிஸ்தான் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி அளித்திருந்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி பயணம் மேற்கொண்டார். இது கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் தலைமைஅமைச்சர் மோடி கலந்து கொண்ட கதை. 

கொரோனா ஆதிக்கத்திற்கு முன்பு வரை எந்த உலக நாட்டுப் பயணம் என்றாலும், இந்தியா சார்பாக மோடிதான் கலந்து கொள்வது முந்தைய ஆறு ஆண்டுகால நடுவண் பாஜக ஆட்சியின் மரபாக இருந்து வந்தது.

இன்று தொடங்கும் மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி ஆகியோரை சந்தித்துப் பேச தலைமைஅமைச்சர் மோடி திட்டமிட்டுள்ளார். அப்போது தீவிரவாத ஒழிப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பாடுகள் குறித்து தலைவர்களுடன் தலைமைஅமைச்சர் மோடி கலந்துரையாடல் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார உறவு இருந்து வருவதும், இந்திய கலாசாரத்தை அந்த நாட்டு மக்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்கானும் வருகை தருகிறார். ஆனால், அவருடன் மோடி கலந்துரையாடல் நடத்த வாய்ப்பில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மோடியின் கிர்கிஸ்தான் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி அளித்திருந்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி பயணம் மேற்கொள்கிறார். இவையெல்லாம் கடந்த ஆண்டு கிர்கிஸ்;தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் கதை.

கொரோனா ஆதிக்ககாலமான தற்போது இரஷ்யாவில் நடக்கும் சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நடுவண் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக நேற்று இரஷ்யா புறப்பட்டு சென்றார்.

இரஷ்யா புறப்படுவதற்கு முந்தைய பேட்டியில், இரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குவுடன் இரு நாடுகளிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளதாக தெரிவித்தார். 

இரண்டாம் உலகப் போரில் இரஷ்யா வெற்றி பெற்றதன் 75ம் ஆண்டு விழாவிலும் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார். ஆனால் கடந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் மோடி பயணத்தின் போது பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இருந்த இடத்தில் தற்போது சீனா இடம் பெற்றுள்ள நிலையில்- சீனப் பாதுகாப்பு அமைச்சரை ராஜ்நாத் சந்தித்து பேச மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென் வி பென்கே மற்றும் பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பெர்வேஜ் கட்டாக் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.