வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கிம் ஜாங் உன் தாத்தாவின் பிறந்தநாள் கடந்த கிழமை கொண்டாடப்பட்டது. வழக்கமாக இதில் கிம் பங்கேற்பார். ஆனால் இந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கிம் பங்கேற்கவில்லை. இது கிம் உடல் நிலை பற்றிய ஊகங்களை எழுப்பியது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசு நடத்திய கூட்டத்தில் தோன்றினார். அப்போதுதான், மக்கள், கடைசியாக அவரை பொது நிகழ்வில் பார்த்தனர். கிம் ஜாங் உன், ஏப்ரல் 12ல் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளாகியதாகவும், அதிகப்படியான புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக வேலைப் பழு காரணமாக கிம் இருதய சிகிச்சைக்கு உள்ளானார். மேலும் இப்போது அவர் ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது. வட கொரியாவிலிருந்து தகவல் சேகரிப்பது மிகவும் கடினம் ஏனெனில், கிட்டத்தட்ட தெய்வம் போல கிம் அந்த நாட்டால் பார்க்கப்படுகிறார். கிம்மை சுற்றியுள்ள எந்தவொரு தகவலையும் கசியவிடாமல் வட கொரியா கடுமையாக கட்டுப்படுத்தி வைப்பது வழக்கம். அவற்றையும் தாண்டி தெரிய வருகிற தகவல்தான்:- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக்குறைவு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



