Show all

ஆஸ்திரேலியத் தலைமைஅமைச்சர் அறிவிப்பு! மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஆஸ்திரேலிய தலைமைஅமைச்சர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பேரறிமுக மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்தத் தடுப்பூசிக்காக ரூ.135 கோடியில் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் தலைமைஅமைச்சர் ஸ்காட் மோரீசன் நேற்று கூறும்போது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிகச்சிறந்த மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனத் தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என்றும், இந்தத் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். 2.5 கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்தத் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.