விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் பருவம் நான்கில் கமல் புதிய தோற்றத்தில் வெளிப்பட இருப்பதாக பல்வேறு படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் பருவம் நான்கில் கமல் புதிய தோற்றத்தில் வெளிப்பட இருப்பதாக பல்வேறு படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நடிகர் கமல்ஹாசன் கடந்த 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அடுத்து பிக்பாஸ் நான்காவது பருவத்தையும் தொகுத்து வழங்க தயாராகி வருகிறார். இதில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி தீயாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி, மோதல், கவர்ச்சி உடைகள் அணிதல் போன்ற சர்ச்சைகளால் சில அமைப்புகள் எதிர்ப்பு கிளப்பி தடை செய்யும்படியும் வற்புறுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நான்காவது பருவத்திற்கு நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும் நடிகைகள் சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலர் தேர்வாகி இருப்பதாக பேசப்படுகிறது. இந்த பருவத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே பரபரப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



