“கர்நாடகாவில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று எச்.இராஜா பதிவிட்டுள்ளார். அவருடைய கூற்று ஏற்புடையதாக இல்லையே! உண்மையில் எது ஆண்மையுள்ள அரசு என்ற விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. 04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலைகளை வைத்துக் கொள்ளவும், சதுர்த்தியைக் கொண்டாடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அதனை ஆண்மையுள்ள அரசு எனக் கூறி, பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.இராஜா கீச்சுப் பதிவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப் படவுள்ளது. இதையொட்டி அண்மைக்கால வழக்கப்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை அமைத்து, ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக ஆறாயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்லலம் கட்டாயமா? என்று அறங்கூற்றுமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட கர்நாடக மாநில அரசு அனுமதி அளித்துள்ளதைக் குறிப்பிட்டு, பாஜகவின் தேசிய செயலாளர் எச்.இராஜா வழக்கம்போல் இயல்புக்குப் பொருந்தாத பொய்மையை முன்னெடுக்கும் பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கீச்;சுப் பதிவில், “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று எச்.இராஜா பதிவிட்டுள்ளார். உண்மையில் எது ஆண்மையுள்ள அரசு என்ற விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இருப்பினும், தடையை மீறி மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்று ஹிந்து அமைப்புகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



