கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது, நியூசிலாந்தை அடுத்து. 01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் குடிப்பகங்கள், உணவகங்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. அடுத்த திங்கட்கிழமை முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளன. கடந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரையான நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 243 ஆக குறைந்து உள்ளது. முந்தைய கிழமை இந்த எண்ணிக்கயானது 353 என இருந்தது. திங்கட்கிழமை முதல் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்க உள்ளோம். பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படும். திங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயும் பயணிக்க முடியும். அடுத்த மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும் என கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



