சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் வருத்தம் அடைந்து வருகின்றனர். 01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் வருத்தம் அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விற்பனை செய்துவரும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயித்து விற்பனை செய்யும் நடைமுறைக்கு நடுவண் பாஜக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா பரவல் தடுப்புக்கு என்பதாக நடுவண்அரசு அறிவித்த ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்களின் வாகனப் பயன்பாடு குறைந்தே காணப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் போக்குவரத்து இயக்கமும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த ஒரு கிழமையாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தே வருகிறது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ79.53-க்கும், டீசல் ரூ72.18-க்கும் விற்பனையாகின்றன. தொடர்ந்து சராசரியாக அன்றாடம் 60 காசுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்ட இந்த விலையுயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



