சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும் கொரோனா பாதித்து உயிரிழந்தார். 01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும் கொரோனா பாதித்து உயிரிழந்தார். மருத்துவத் துறையில் கொரோனா சிகிச்சையளிப்பில் இருப்பவர்களுக்கு அரசின் பாதுகாப்பு நடவடிக்கையின் குறைபாட்டை இது உணர்த்துவதாகிறது. சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்த 155 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில், அதிகபட்சமாக அரசு மருத்துவமனையில் 50 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை மொத்தம் 135 செவிலியர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் 56 அகவை செவிலியர் ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த அவர் மீண்டும் பணிக்கு திரும்பினார். தொடர்ந்து பணியாற்றிய அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிடி ஸ்கேனில் கிரேடு 3 என்ற பாதிப்பு தெரிந்ததால் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் கணவரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



