தொடக்கத்திலிருந்தே டிரம்ப் ஐயம் கிளப்பிவரும் செய்திக்கு தற்போது ஓர்அங்கீகாரம் அளிக்கும் வகையாக கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது என சீன நுண்நச்சியலர் மருத்துவர் லி-மெங் யான் பகீர் தகவலை வெளியிட்டு உலகிற்கு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். 29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது என சீன நுண்நச்சியலர் மருத்துவர் லி-மெங் யான் பகீர் தகவலை வெளியிட்டு உலகிற்கு பரபரப்பை பற்ற வைத்துள்ளார். கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு இயல்அறிவுபாட்டு (சயின்டிபிக்) ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சீன நுண்நச்சியலர் ஒருவர் காணொளி நேர்காணலில் கூறியுள்ளார். மருத்துவர் லி-மெங் யான் ஒரு சீன இயல்அறிவர், கொரோனா நுண்நச்சு குறித்து கடந்த ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வந்தார். கொரோனா நுண்நச்சு ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை அவர் கண்டபோது, அவர் ஹாங்காங் பொது நலங்குப் பள்ளியில் பணிபுரிந்தார். தனது ஆராய்ச்சியின் போது, சீனாவில் இந்த நுண்நச்சு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் உண்மைகளைக் கண்டறிந்தார். கொரோனா நுண்நச்சு பதிவாகியபோது உலக நலங்கு அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார். உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை அறிந்திருந்தாலும் சீன அதிகாரிகள் அவரது எச்சரிக்கைகளை புறக்கணித்தனர் என அவர் மேலும் கூறினார். இந்த நுண்நச்சு இயற்கையாக உருவானதன்று, என்று அவர் வலியுறுத்தினார். “மரபணு வரிசை ஒரு மனித விரல் அச்சு போன்றது. எனவே இதன் அடிப்படையில் நீங்கள் இந்த பாடுகளை அடையாளம் காணலாம். ஆனால் உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் சில இயல்அறிவர்கள் மூலமாக இது தயாரிக்கப்பட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன்,” என்று லி-மெங் யான் கூறினார். இந்த ஆபத்து குறித்து உலகிற்கு தெரியப்படுத்துவது குறித்து பேசிய லி-மெங் யான், சீன அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தியதாக கூறினார். இதன் காரணமாக அவர் சீனாவை விட்டு அமெரிக்கா வர வேண்டியிருந்தது. தன்னைப் பற்றி வதந்திகளை பரப்புவதற்கும், அவரது அனைத்து தகவல்களையும் நீக்குவதற்கும் சீன அதிகாரிகள் மக்களை நியமிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் யான் இப்போது அமெரிக்காவில் ஒளிந்து கொண்டிருக்கிறார். ஆனால்- வுகான் நுண்நச்சியல் நிறுவன இயக்குநரான யுவான் ஜிமிங் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்திருந்தார். இந்தக் காணொளி கோரிக்கையை சீன அதிகாரிகள் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. சீன நுண்நச்சியலர் மருத்துவர் லி-மெங் யான் கொரோனா நுண்நச்சு வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதற்கு தான் கண்டறிந்த ஓர் ஆய்வு முடிவை ஆதாரம் ஆக்குகிறார். அதை வைத்து சீனாவைக் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தி நிருபிப்பதற்கு உலகில் ஏதும் அமைப்புகள் இல்லை. ஒன்னரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை சிங்கள இனவாத அரசு கொத்து காட்டுவதைப் போல- சீனாவும் பலகோடி மனித உயிர்களை கொன்றொழிப்பதற்கு காரணமாக அமைந்ததாக கண்டறிவதற்கு உலகில் இதுவரை அமைப்புகள் இல்லாத நிலையில், சீனாவும் கெத்து காட்டிக் கொண்டிருக்கும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



