Show all

நீட் தேர்வு குறித்து, சூர்யா சோக அறிக்கை!

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்: போற்றிக் கொள்ள வேண்டிய வைரவரிகள்.

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் நேற்று நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகர் சூர்யா நேற்று இரவு வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். 

அந்த அறிக்கையில் ‘நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. 

கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலக்கட்டத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். 

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி கலந்துரையாடல் மூலம் நியாயம் வழக்கும் அறங்கூற்றுமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று வருந்தியிருந்தார்.

சூர்யாவின் அறிக்கையில், ‘கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி கலந்துரையாடல் மூலம் நியாயம் வழக்கும் அறங்கூற்றுமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என்று வருந்தியிருந்ததை குறிப்பிட்டு அவர் மீது அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று அறங்கூற்றுவர் எஸ் எம் சுப்பிரமணியம், சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவருக்கு கடிதம் எழுதியுள்ளாராம்.

நீட் தேர்வு மரணம் குறித்த சூர்யாவின் அறிக்கை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. “அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்” போற்றிக் கொள்ள வேண்டிய வைரவரிகள் என பாராட்டு பெற்று வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.