Show all

நடுவண் பாஜக அரசு- இனி உருப்படியாய் கொரோனா விரட்டல் வேலையைப் பார்க்கலாம்! சீனாவிற்கு எல்லைச் சண்டையைத் தொடர விருப்பமில்லையாம்

நடுவண் பாஜக அரசு, இனி உருப்படியாய் தங்கள் நாட்டிற்குள் கொரோனா விரட்டல் வேலையைப் பார்க்கலாம்! சீனாவிற்கு எல்லைச் சண்டையைத் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பாஜகவிற்கு வடைபோச்சே என்கிற சோகத்தையும் வழங்கியிருக்கிறது சீனா.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்களுக்கு எந்த வசதி வாய்ப்புகளும் உருவாக்கித் தராமல் அடிமையாக நடத்த வேண்டும் என்கிற கோட்பாட்டிற்கு சொந்தமான நடுவண் பாஜக அரசு:- கொரோனா பாதுகாப்பில் கூட மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாய்ச்சவடால் அரசாகவே இயங்கி வருகிறது.

நடுவண் பாஜக அரசு கொரோனா பரவலைத் தடுக்க வென்று வெறுமனே அதிகாரப்பாடாக ஊரடங்கை மட்டும் அறிவித்து விட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், மாநில நலங்குத்துறை, மருத்துவம், காவல் துறை உள்ளிட்ட அரசுப்பணியாளர்களும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும், அன்றாடங்காய்ச்சி மக்களும் விலைகொடுத்து ஊரடங்கை முன்னெடுத்து வருகின்றனர்.  

இப்படியே மக்களை கொரோனவோடே வாழப்பழகச் செல்லிவிட்டு நடுவண் பாஜக அரசு தங்கள் மேலாதிக்கத்தை மட்டும் நிறுவி வந்த நிலையில், தங்களுக்கு இந்திய தேசத்தைக் காப்பாற்றும் கடமையே தலைக்கு மேல் இருப்பதாகக் காட்டிக் கொள்ள- நேபாளம் ஒரு வரைபடத்தின் மூலம், நடுவண் பாஜக அரசு வழக்கமான தேசப்பற்று சவடாலில் ஈடுபட வாய்ப்பு கொடுத்தது. 

நடுவண் பாஜக அரசு அதை வைத்து குளிர்காயலாம் என்று நெருப்பு மூட்டியபோது, நேபாளம் பின்வாங்கி விட்டது. அடுத்ததாக எல்லையில், சீன-இந்திய இருநாட்டு இராணுவங்களுக்கு இடையிலாக ஒரு மோதலைத் தொடங்கி சீனா நடுவண் பாஜக அரசுக்கு இந்திய தேசத்தைக் காப்பாற்றும் கடமையே தலைக்கு மேல் இருப்பதாகக் காட்டிக் கொள்ள- ஒரு வாய்ப்பை வழங்கி ஒரு தமிழ் மாவீரனின் உயிரைப் பறித்துக் கொண்டது.

இதை வைத்து கதைவளர்க்க இன்று நடுவண் பாஜக பதினைந்து மாநில முதல்வர்களோடு கலந்துரையாடல் நடத்தி- தங்களுக்கு இந்திய தேசத்தைக் காப்பாற்றும் கடமையே தலைக்கு மேல் இருப்பதாகக் காட்டிக் கொள்ள- முனைந்திருக்கிற வேளையில் 

நடுவண் பாஜக அரசு, இனி உருப்படியாய் தங்கள் நாட்டிற்குள் கொரோனா விரட்டல் வேலையைப் பார்க்கலாம்! சீனாவிற்கு எல்லைச் சண்டையைத் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பாஜகவிற்கு வடைபோச்சே என்கிற சோகத்தையும் வழங்கியிருக்கிறது சீனா.

ஆம்! இந்தியாவுடனான லடாக் எல்லை பிரச்சனையை கலந்துரையாடல் மூலம் முடிவுக்குகொண்டுவர சீனா முன்வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்திய சீன எல்லையில் சீன இராணுவம் முகாமிட்டு அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக எல்லை பதட்டம் நிலவி வந்தது. இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் இரு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த மாவீரன் பழனி மற்றும் கர்னல் சந்தோஷ்பாபு, சிப்பாய் ஓஜா ஆகிய மூன்று பேர் வீரமரணமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சீன இராணுவம் கலந்துரையாடல் மூலம் போர் முயற்சியிலிருந்து பின்வாங்க போவதாக செய்திகள் வந்தன. ஆனால், சீன தரப்பு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் மோதல் ஏற்பட்டததாகவும், அதுவே இரு தரப்பு மோதலுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், லடாக் எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள பதட்டத்தைக் கலந்துரையாடல் மூலம் முடிவுக்கு கொண்டுவர சீன தரப்பு விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சாவோ லிஜியான் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘இந்தியா தனது எல்லை இராணுவத்தை கண்டிப்பாக ஒழுங்குபடுத்தவும், மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை ஒரே நேரத்தில் நிறுத்தவும், சீனாவுடன் இணைந்து செயல்படவும், கலந்துரையாடல் மூலம் மோதலை தீர்ப்பதற்கான சரியான பாதையில் திரும்பி வரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கால்வான் பள்ளத்தாக்கு பகுதியின் இறையாண்மை எப்போதும் சீனாவுக்கு சொந்தமானது. எல்லை தொடர்பான சிக்கல்கள் குறித்து நாங்கள் ஒருமித்த கருத்தில் இருக்கிறோம். இந்திய இராணுவம் எல்லை நெறிமுறைகளை மீறி செயல்பட்டன. சீனத் தரப்பில் இருந்து, மேலும் மோதல்களைக் காண நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.