கொரோனா பாதிப்பு தொடர்பாக என்று இன்று, தலைமைஅமைச்சர் மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதிப்பு தொடர்பாக என்று இன்று, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனராம். கொரோனா பாதிப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று காணொளி கலந்துரையாடல் மூலமாக 21 மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமைஅமைச்சர் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார். இன்று 15 மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழ்நாடும் ஒன்று. இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்சா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சீனா மற்றும் இந்தியா இடையே எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையில் இவ்விரு முதன்மை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது கொரோனா மற்றும் ஊரடங்கு பாதிப்பை- சீனா மற்றும் இந்தியா இடையே எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை என்கிற பேர்வையை வைத்து மறைப்பதற்கான முன்னெடுப்பாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. மாநில முதல்வர்களிடம் சீன நிலவரம் தொடர்பான அச்சுறுத்தலை நிலைக்கொள்ளச் செய்ய கட்டுமானம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட, நாம் பெரிதும் அஞ்ச வேண்டியதும், எதிர்கொள்ள வேண்டியதும் சீனா மற்றும் இந்தியா இடையே எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையே என்று இந்திய மக்கள் தயார் படுத்தப் படுவார்கள். நாம் கொரோனாவேடும், மாநில அரசுகள் அடிக்கடி முன்னெடுக்கும் ஊரடங்குகளோடும், கைகளைக்கூட அடிக்கடி சோப்புப்போட்டுக் கழுவாத, முகமூடி அணிய மனமில்லாத அடாவடி மனிதர்களோடும் வாழப்பழகுவோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



