Show all

வெற்றிபெற வாழ்த்துவோம்! கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கான தடுப்பு மருந்து- பரிசோதிக்கும் பணியை இன்று தொடங்குகிறது அமெரிக்கா

கொரோனா நுண்ணுயிரித் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு  முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில்,  கொரோனா நுண்ணுயிரி தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகானில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை உருவாக்கியதோடு, தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது கொரோனா. 

உலக அளவில், ஒரு இலட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 5,800-ஐ தாண்டியது.  அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மூயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நுண்ணுயிரித் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு  முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில்,  கொரோனா நுண்ணுயிரி தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனாலும் இந்தப் பரிசோதனை குறித்து இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில் கசிவுத் தகவலாக வெளியாகியுள்ளது. சியாட்டில் உள்ள  கைசர் பெர்மனண்டே வாசிங்டன் நலங்குத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற இருக்கும் இந்தச் சோதனைக்கு தேசிய நலங்குத்துறை நிறுவனம்  நிதியுதவி செய்துள்ளதாகவும் கசியும் தகவல் தெரிவிக்கிறது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை முழுமையாக சரிபார்க்க  ஒரு முழு ஆண்டு கூட ஆகலாம் என்று கருதப்படுவதுதான்  வருத்தமளிப்பதாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.