கொரோனா நுண்ணுயிரி பீதியால், உலக பங்குச் சந்தைகள் சரிந்ததால் ஜெப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உலகப் பெரும்பணக்காரர்கள் ஒரே நாளில் 7800 கோடி டாலர் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர். 03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பீதியால், உலக பங்குச் சந்தைகள் சரிந்ததால் ஜெப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உலகப் பெரும்பணக்காரர்கள் ஒரே நாளில் 7800 கோடி டாலர் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர். கொரோனா நுண்ணுயிரிப் பீதியால், பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தைகள், முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பங்குச்சந்தையில் சந்தித்திருப்பது பேரிழப்பாகும். இதன் தொடர்ச்சியாக உலகப் பணக்காராகள் ஒரே நாளில் 7800 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளனர். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை இழந்தார். இதேபோல் பெர்னாடு அர்னால்ட், 770 கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளார். பங்குச் சந்தை சரிவின் காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 698 கோடி டாலர்களை இழந்துள்ளார். முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்- தனது சொத்து மதிப்பில் 9 விழுக்காட்டை இழந்துள்ளார். இதேபோல், ஓரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், கூகுள் நிறுவனர்கள் லாரி பெய்ஜ், சர்ஜ பிரின், எலன் மஸ்க் ஆகியோரும் கணிசமான அளவில் தங்களது சொத்து மதிப்பை இழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, ஆசிய அளவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42 ஆயிரம் கோடி ரூபாய் சரிந்து 3,29,000 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதன்மூலம், பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



