Show all

விஜய் சேதுபதி அசத்தல்! சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீங்க

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி: இன்னொரு தொற்று தற்போது பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மாமனிதனைப் படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்.

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி மதம் பற்றியும், கொரோனா வைரஸ் குறித்தும் பேசிய பேச்சு அரங்கத்தில் கொண்டாடிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் கேளொலி வெளியீட்டு விழா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா மாளிகையில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, படத்தின் கதைத்தலைவி மாளவிகா மோகனன், படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், என பல பேரறிமுகர்கள் பங்குபெற்றனர்.

விஜய் சேதுபதி கெண்;டாடிகளின் ஆரவாரக் கைத்தட்டல்களுடன் மேடையேறினார். அவருடைய பேச்சுக்கும் கைத்தட்டல்கள் மட்டுமன்றி விசில் சத்தங்களாலும் அரங்கம் அதிர்ந்தது. 

கொரோனாவை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இது இயல்பாக நடக்கும் ஒன்று. மனதை பலப்படுத்திக்கொள்ளுங்கள். மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான். மேலிருந்து ஒன்று வராது. சொந்த உறவுகளையே தொட்டுப் பேச பயப்படும் இந்த சூழ்நிலையிலும் தொட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றி என்று பேசினார்.

மேலும் பேசிய சேதுபதி ‘இன்னொரு தொற்று தற்போது பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மாமனிதனைப் படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்.  சாமியை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. அது புளுகு, தயவு செய்து நம்பாதீங்க. 

யாராவது சாமி பற்றியோ என்னுடைய மதம் இப்படிச் சொல்கிறது என்று பேசினால் பதிலுக்கு என்னுடைய மதம் இப்படி சொல்கிறது என்று பேசாதீர்கள் அதற்கு பதில் மனிதத்தையும், மனித நேயத்தையும் கற்றுக்கொடுங்கள். கடவுள் மேல இருக்கான். பூமியில் வாழும் மனிதர்கள் நாம் தான் ஒவ்வொருவருக்கும் பக்கபலம். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு மகிழ்ச்சியாக வாழுங்கள். அன்பை மட்டுமே பகிர்ந்து வாழுங்கள். மதத்தைச் சொல்லி சாமிகளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும், சாமிக்குள்ளும் இடையில் மதம் என்பது கிடையாது. தயவுகூர்ந்து நம்புங்க’ என்று பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.