கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘தொடர்பைக் கண்டறிதல்’, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. அதற்கு நாம் ‘தொடர்பைக் கண்டறிதல்’ முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். என்பதாக உலக நலங்கு நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், ‘தொடர்பைக் கண்டறிதல்’ நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. நோய் பரவாமல் தடுப்பதே இந்த நேரத்தில் மிக முதன்மையான ஒன்று. சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கோவிட்-19 நுண்நச்சு, உலகம் முழுக்கப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியாவில் நோய் பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. நோய் பரவலைத் தடுக்க, பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக நாடுகள் ‘தொடர்பைக் கண்டறிதல்’ (கான்டாக்ட் ட்ரேஸிங்) ல் செய்த தவறுகளே இந்த நிலைக்குக் காரணம் என்றும், வரும் காலங்களில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சாக்குக் கூறாமல், கூடுதல் முனைப்புடன் அதை நடைமுறைப்படுத்தி, நோய் பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் உலக நலங்கு நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதனாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டெட்ரோஸ், “நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது வருத்தமளிக்கிறது. உலகின் பல இடங்களில் கொரோனா நுண்நச்சு தற்போது மிகவும் தீவிரமாகப் பரவிவருகிறது. ஏராளமான உயிர்ச் சேதங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திவரும் கொரோனாவின் முழு தீவிரத் தாக்குதலை உலகம் இனிமேல்தான் எதிர்கொள்ளவிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘தொடர்பைக் கண்டறிதல்’, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. நோய் பரவாமல் தடுப்பதே இந்த நேரத்தில் மிக முதன்மையான ஒன்று. அதற்கு நாம் ‘தொடர்பைக் கண்டறிதல்’ முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், நோய் பாதிப்பு அதிகமுள்ள பெரும்பாலான நாடுகள் அதை முறையாக மேற்கொள்ளாமல், மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும் இந்தப் பேரிடர் நிலையிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்புகிறோம். ஆனால், எண்ணத்துக்கேற்ற செயல்பாடுகள் நம்மிடம் ஒருபோதும் காணப்படுவதில்லை. இன்னமும், மக்கள் நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாகும் விதத்தில் கவனமின்மையில் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். கடந்த முறை, எபோலா நோய் பாதிப்பு நேரத்தில் காங்கோ நாட்டின் குக்கிராமங்களில்கூட ஒரு நாளைக்கு 25,000 வரை ‘தொடர்பைக் கண்டறிதல்’ செய்ய முடிந்தது. “ஆனால், தற்போது அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் சிரமமான செயல் என்று வாதிடுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார். நாம் நாம் காவல் துறையினரை ‘தொடர்பைக் கண்டறிதல்’ வகைக்கு பயன்படுத்த சிறப்பான வாய்ப்புகள் எல்லாம் இருக்கிற நிலையில் அவர்களை பொத்தாம் பொதுவான ஊரடங்கிற்கு பாதுகாவலர்களாய் நிறுத்தி சாத்தான் குளம் போன்ற அடாவடிகளைத்தான் சந்தித்து வருகிறோம். ஆரோக்கிய சேது செயலியை ‘தொடர்பைக் கண்டறிதல்’ வகைக்கு சிறப்பாக பயன்படுத்த ஆயிரம் வாய்ப்புகள் இருக்கிறது நடுவண் அரசுக்கு. ஆனால் வெறுப்பு அரசியலுக்கே முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறது நடுவண் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாஜக அரசு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



