Show all

ஊரடங்கால் வருமானமும் குறைந்த நிலையில்- பார்வையாளர் தரும் வரிசையிலும், சறுக்கியது விஜய் தொலைக்காட்சி!

ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. 

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. 

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சி, பார்வையாளர் தரும் வரிசையில் (டிஆர்பி) சறுக்கி தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியைப் பின்னுக்கு தள்ளி, 316327 பார்வையாளர்களைப் பெற்று 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது ஜி தமிழ்.

இந்நிலையில் என்றும் முதலாம் இடம் என்று தற்போதும் நிரூபித்துள்ளது சன் தொலைக்காட்சி ஆம், 853698 பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது சன் தொலைக்காட்சி. ஊரடங்கில், மாபெரும் வருமான இழப்பில், இந்த முதலிடம் என்பது சின்ன ஆறுதலாக மட்டுமே இருக்க முடியும்.

மேலும் கேடிவி தொலைக்காட்சி 293768 பார்வையாளர்கள் பெற்று 4 ஆம் இடமும், மற்றும் விஜய் சூப்பர் 162469 பார்வையாளர்கள் பெற்று 5ஆம் இடமும் பிடித்துள்ளன. 

கொரோனா பரவலுக்கு எதிராக- தெளிவு இல்லாத ஒரு ஊரடங்கை கடந்த 102 நாட்களாக நடுவண் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகள் மூடவேண்டியதைத் திறப்பது (டாஸ்மாக், பொதுப் போக்குவரத்து) திறக்க வேண்டியதை மூடுவது (தாங்களே கொரோனா பரவலை சமாளித்துக் கொள்ளக் கூடிய பெரு நிறுவனங்கள், தனித்து இயங்கும் சிற்றூர்கள்) என்று கொரோனா பரவலுக்கு தொடர்பில்லாத ஊரடங்கை முன்னெடுத்து வருகிறது. 

தாங்களே கொரோனா பரவலை சமாளித்துக் கொள்ளக் கூடிய பெரிய நிறுவனங்களான தொலைக்காட்சி நிறுவனங்கள், ஊரடங்குக்கு மாற்றாக உரிய திட்டங்களைத் தெரிவித்து அரசிடம் அனுமதி பெற்று தாராளமாக கொரோனாவிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும், படப்பிடிப்பும் நடத்த முடியும் என்பதற்காக சிந்திக்க வேண்டும் செயல்பட வேண்டும். கொரோனவை விட ஊரடங்கு ஆபத்தானது என்பதை கடந்த 101 நாள் ஊரடங்கு நமக்கு உணர்த்தியிருக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.