சீனாவில் மீண்டும் கொரோனா தாக்குதல் அயல்வழிப் பரவலாக. ஒரே நாளில் 7 பேர் பலி; 78 பேர் பாதிப்பு. இந்த நிலையில் சீனாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய நலங்கு ஆணையம் தெரிவித்துள்ளது. 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகளவில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை 476 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த தொற்றின் தாக்கம் தணிந்து இருந்தது. கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. ஆனால் சீனாவில் புதிதாக 78 பேர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த ஏழு மரணமும் கூபே மாகாணத்தில் தான் என தெரியவந்துள்ளது. விதைத்த விதை பாதிப்பாக, இதில் 74பேர்கள் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மொத்தமாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,171 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 73159 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 3277 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சீனாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய நலங்கு ஆணையம் தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



