Show all

இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறாராம் தலைமைஅமைச்சர் மோடி!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழக நிலவரம்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கடந்த வியாழக்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய தலைமைஅமைச்சர் மோடி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. உலகப் போரை போன்று மிகவும் கொடியதாக கொரோனா இருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தருணம் இது.

கட்டாயத் தேவைகள் அன்றி மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலகங்களுக்கு பதில் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். யாரும் அலட்சியமாக செயல்படக் கூடாது. ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம்.

அனைவரும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும். அன்றைய நாள் மாலை 5 மணிக்கு கட்டாயத்தேவை பணிகளுக்குச் செல்பவர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும். என்றெல்லாம் தெரிவித்திருந்தார். நாமும் சுய ஊரடங்கை நல்லமுறையாகவே பின்பற்றினோம். ஆனால் வடஇந்தியர்கள் சுய ஊரடங்கை ஈடுபாட்டுடன் முன்னெடுக்கவில்லை மோடி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தலைமைஅமைச்சர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறாராம். இதுபற்றி தனது கீச்சுவில் அதிகாரப்பாடாகத் தகவல் தெரிவித்துள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.