பிரான்சில் செல்பேசி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 90விழுக்காடு துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த ஓராண்டு காலமாக, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்துகொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது. இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,064 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,29,891 ஆக உள்ளது. இந்த நிலையில் பிரான்சில் செல்பேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை அறிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 விழுக்காடு துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை செல்பேசியில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அடுத்தகட்டமாக 1000 பேருக்கு பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.