சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், உயரமான இடத்தில் இருந்து கொட்டிவந்த நயாகரா அருவி, தற்போது கடுங்குளிரில் உறைந்து நிற்கிறது. 11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் மிக உயரமான அருவி என்று கொண்டாடப்படும் நயாகரா அருவியின் ஒரு பகுதி கடும் குளிர் காரணமாக அப்படியே உறைந்து போய்விட்டது. இந்த நிகழ்வு சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக பருவம் தவறி கால நிலைகள் மாறி வருகின்றன. இயற்கைக்கு எதிராக மனிதன் தொடர்ந்து விளைவித்துக் கொண்டிருக்கிற மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர், இந்த நிலையில், அமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக மின் விசிறிகளில் கூட பனிக்கட்டி தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி திகில் ஏற்படுத்தின. இந்த நிலையில் தான் உலகின் மிகப்பெரிய அருவி என்று புகழப்படும் நயாகரா அருவியின் ஒரு பகுதி உறைந்து போய்விட்டது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள பகுதி நயாகரா அருவி ஆகும். இங்கு கடும் குளிர் காரணமாக விழுகின்ற தண்ணீர் உறைந்து விட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டும் அது தண்ணீராக விழுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.