Show all

கொரோனா சீனாவின் உயிரி ஆயுதம் என்கிறது அமெரிக்கா! இருபதுஇலட்சம்கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது

கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 இலட்சம்கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கோரி, அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 இலட்சம்கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கோரி, அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரிலிருந்துதான் கொரோனா நுண்ணுயிரி பரவத் தொடங்கியது. அங்கு, சீனாவின் மிகப் பெரிய நுண்ணுயிரியல் ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் தான் கொரோனா நுண்ணுயிரி உருவாக்கப்பட்டிருக்கும் என, உலக நாடுகள் ஐயம் தெரிவித்தன.

இதையடுத்து, அமெரிக்க இராணுவ வீரர்கள்தான், உகானில் கொரோனா நுண்ணுயிரி பரவக் காரணமாக இருந்தனர் என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் குற்றம்சாட்டினார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனாவை 'சீன நுண்ணுயிரி” எனக் குறிப்பிட்டார். அதன்பின், இரு நாடுகளும் மாறி மாறி, தங்களது நாட்டில் பணியாற்றும் எதிரி நாட்டின் இதழியலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றின. இரு நாடுகளும் அவரவர் நாட்டு கொரோனா தாக்குதலில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. 

தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண அறங்கூற்றுமன்றத்தில், வாசிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து, சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பதிகை செய்யப்பட்டுள்ள மனுவில், கொரோனா நுண்ணுயிரி ஒரு உயரி ஆயுதம். ஒரு மனிதரிடத்தில் இருந்து மற்றவருக்கு எளிதாக தொற்றும்படி அதை சீனா வடிவமைத்துள்ளது. அந்த நுண்ணுயிரியால், உலகில் 3,34,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர்; 17,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நுண்ணுயிரி மிகுந்த ஆபத்து நிறைந்தது. உலக பொதுச்சட்டத்தை மீறி இந்த நுண்ணுயிரியைச் சீனா உருவாக்கி பரப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு 20 இலட்சம்கோடி அமெரிக்க டாலர்களை, சீனா இழப்பீடுhகத் தர வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

மேலும், சீனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு வெற்றி பெற, உலக நாடுகள் துணை நிற்க வேண்டும் எனத் தனது கீச்சு பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஏற்பதாகப் பல்வேறு நாட்டு மக்களும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, 'உலக மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா நுண்ணுயிரி சீனா தயாரித்த உயிரி ஆயுதமாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு சீனா பதிலளித்தாக வேண்டும் எனக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்: எய்ட்ஸ் மாதிரி, கொரோனா மனித தவறுகளால் தன்னிச்சையாக உருவான நுண்ணுயிரித் தொற்றா? இல்லை அமெரிக்கா குற்றம் சாட்டுவது போல ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்ட உயிரி ஆயுதமா? மக்கள் நடுவே கடுமையான விவாதம் ஓடத் தொடங்கிவிட்டது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.