Show all

அழிவு சக்தி கொரோனாவைப் பரப்பிக் கொண்டிருப்பது என்னவோ நாமேதாம்! நம்மை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தையும் வீழ்த்துகிறது

அழிவு சக்தி கொரோனாவால், பங்குச்சந்தையில் மட்டும் 58.71 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறோம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச் சந்தையில் மொத்த சந்தை மதிப்பு 160.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்றைய கணக்குப் படி அதே மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 101.86 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. 

ஆக சுமார் 58.71 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறோம். மொத்த இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு சிறிய பகுதி தான் இது. அந்த சிறிய பகுதியின் மதிப்பு இழப்பே 58.71 லட்சம் கோடி ரூபாய் 

அமைப்பு சாராத தொழிலாளர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் போன்றவர்கள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் எத்தனை லட்சம் கோடி காலியாகும். மக்கள் இதனையெல்லாம் ஈடுகட்ட எந்தெந்த சொத்துக்களை விற்பார்கள். எவ்வளவு கடனாளி ஆவர்கள் என்றே தெரியவில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.