04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நியூசிலாந்தின் பெண் நடுவண் அமைச்சர் ஜூலி அன்னே ஜென்டெர், தன் பிரசவத்திற்காக தன்னுடைய மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை தனது இன்ஸ்டாகிராமில் தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது மிகவும் வேகமாக பரவி வருகிறது. நியூசிலாந்தின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராக பணியாற்றுகிறார். 38 அகவையாகும் ஜெண்டேர். இவர் ஒரு மிதிவண்டி பிரியர். தம் குழந்தைக்காக, நாங்கள் மிதிவண்டியில் கூடுதல் இருக்கையை அமைக்கவுள்ளோம் என்ற பதிவின் மூலம் அறிவித்திருந்தார். மூன்று மாதம் தனது பேறுகால விடுப்பை எடுக்கப்போகும் இவர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணைந்துள்ளார். தமிழகத்தில் தொடக்க சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்துக் கொள்ளும், அன்றாடம் நூற்றுக் கணக்கான பெண்கள் நடந்தே சென்று குழந்தை பெற்றுக் கொண்டு நடந்தே வீட்டுக்கு வருகிறார்கள். இது நமக்கு சாதாரணம்! மேல்தட்டு மக்களுக்கு இணைத்தில் பகிர்ந்து கொள்ளும் அதிசயமாக இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,885.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



